தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அயல்நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை அலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை வருவாய் துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருஷபத்து கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ராஜேந்திரன் என்பவரை அடையாளம் கண்டு அவரது வீட்டிற்கு சென்று அலுவலர்கள் அவரை தனிமைப்படுத்தினர். அப்பொழுது அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையை குத்தினர். மேலும் தனிமைப்படுத்தல் என்றால் என்ன என்பது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.