நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை சீயாத்தமங்கையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் பருத்தியினை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் அந்த விற்பனைக் கூடத்தில் ஜூலை 5ஆம் தேதி பருத்தி ஏலம் விடப்போவதாக அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அன்று முன் அறிவிப்பின்றி ஏலம் ரத்து செய்யப்பட்டது. அதனால் அன்று பருத்தி ஏற்றிவந்த விவசாயிகள் இரண்டு நாள்களாக வாகனங்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தனர். அதையடுத்து இன்று பருத்தி ஏலம் தொடங்கிய நிலையில் வாகனங்களிலிருந்து பருத்தியை இறக்க அலுவலர்கள் அனுமதி வழங்காமல் வாகனங்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர்.