காரைக்காலில் உள்ள பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, அவ்வையார் பெண்கள் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிக்கும் கடந்த ஆண்டுகளில் இளங்கலை கலந்தாய்வுக் கூட்டம், விண்ணப்ப படிவங்கள் ஆகிய மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் புதுச்சேரியில் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படுகிறது- புதுச்சேரி கல்வி அமைச்சர் பாராட்டு! - நாகப்பட்டின மாவட்ட செய்திகள்
காரைக்கால்: தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படுவதாக புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
தற்போது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று 2020-2021ஆம் ஆண்டு சேர்க்கை காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இளங்கலை கலந்தாய்வுக் கூட்டம் காரைக்காலில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. இதில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆணையை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ள கல்வி தொலைக்காட்சி சிறப்பாக உள்ளதாகவும், தொலைக்காட்சியில் கற்பிக்கப்படும் பாடங்கள் எளிதில் புரியும் வகையில் உள்ளதென்றும் இதனை பயன்படுத்தி புதுச்சேரி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுத்தினர். புதுச்சேரி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக வசதிகளுடன் இருப்பதாகவும், மாணவர்களின் பெற்றோர்கள் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் சூழ்நிலையில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக அளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கலைக் கல்லூரி பணி நியமனங்களில் ஊழல் மனு விசாரணை