மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அருகேயுள்ள ஆனந்தாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம்.
இந்நிலையில் 14ஆவது வார்டு பகுதியில் உள்ள கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையோரம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குப்பைகளை நகராட்சி நிர்வாகமே கொட்டி வருகிறது.
14,15,16 உள்ளிட்ட வார்டுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்டுவதால் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன.
குப்பை மலை உருவாக்கும் நகராட்சி மேலும் குப்பைகளை கொளுத்திவிட்டு வரும் புகை மூட்டத்தால் அருகில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈக்கள் அதிகரித்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரிப்படுகை ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் அனுமதி -மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்