தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடைகளில் புழுத்துப்போன அரிசி : பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேசன் கடைகளில் புழுத்துப்போன அரிசி
ரேசன் கடைகளில் புழுத்துப்போன அரிசி

By

Published : Dec 8, 2021, 7:14 AM IST

மயிலாடுதுறைமாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் நியாயவிலை (ரேஷன்) கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சோழம்பேட்டை ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ரேஷன் கடையில் உண்ண முடியாத புழுத்துப்போன அரிசியைத் தொடர்ந்து வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டியும் தரமான அரிசி வழங்கக் கோரியும் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு NPHH என்ற குடும்ப அட்டைகள் வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், தவறாக வழங்கிய NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டையாக மாற்றி வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.

நல்ல அரிசி வழங்கப்படும்

இதனையடுத்து, தகவலறிந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் மற்றும் குத்தாலம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:Helicopter விபத்தில் உயிரைக் காத்த குடும்பத்தினர்; வீடு தேடி சென்று நன்றி சொன்ன நல்ல பணக்காரர்

ABOUT THE AUTHOR

...view details