தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியுமாகவுள்ள சாலைகள்: சீரமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை! - Public demand for repair of roads

மயிலாடுதுறை: சீர்காழியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழியில் சாலைகளை சீரமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை  வாகன ஓட்டிகள்  சீர்காழியில் சாலைகளை சீரமைத்து தர கோரிக்கை  Public demand for repair of roads in Sirkazhi  Public demand for repair of roads  Motorists
Public demand for repair of roads

By

Published : Jan 5, 2021, 4:48 PM IST

தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும் குழியுமாக மாறி மோசமான நிலையில் உள்ளது.

அதாவது சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை, சிதம்பரம், நாகப்பட்டினம், காரைக்கால் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளிலும், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், பழையார், வடரங்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன.

சீர்காழியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள்

கோரிக்கை

இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நாள்தோறும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தும், கை, கால் முறிவு ஏற்பட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆற்றை சீரழிக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details