நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் அதிக அளவில் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும் நடவடிக்கையாக மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அரசு நிர்வாகத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை எதையும் கடைப்பிடிக்காமல் பெரிய கடை வீதி, பட்டமங்கல தெரு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக எவ்வித அச்ச உணர்வுமின்றி குவிந்தனர்.