தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எம். சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளான மே 31ஆம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
நாகை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் மயிலாடுதுறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
protest
இந்நிலையில், போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், அலுவலர்கள் யாரும் பணியில் ஈடுபடாமல் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.