நாகப்பட்டினம் அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.
அரசு அறிவிப்பின்படி அப்பணிகள் அங்கு தொடங்கப்படாததால், அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடந்த 4 நாள்களாக சாமந்தான்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி பேச்சுவார்த்தைக்கு முன் வராததால், விரக்தியடைந்த 500-க்கும் மேற்பட்டமீனவர்கள் இன்று சாமந்தான்பேட்டை கடற்கரையில் குடும்பத்துடன் படகுகளில் நின்றுகொண்டு வலைகளை தங்கள் மீது போர்த்தியவாறு, அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.