நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார், நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட தலைவர் இராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.