நாகையில் நேற்று முன்தினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை கண்டன பேரணி நடைபெற்றது. காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில், திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, நாம் தமிழர் மற்றும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் போராட்டம் - 750 பேர் மீது வழக்குப் பதிவு
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 750 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
protest
இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 355 பெண்கள் உட்பட 750 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நாகை வெளிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.