மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், புதுச்சேரி முதல் காரைக்கால் வரை ஆழ்கடல் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த உரிமையை ரத்து செய்யக் கோரியும், விளை நிலங்களையும், மலைகளையும் பசுங்காடுகளையும் அழித்து மேற்கொள்ளப்படும் சென்னை-சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்தை கைவிடக் கோரியும், மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டம்! - கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்! - எட்டுவழி சாலைத்திட்டம்
மயிலாடுதுறை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
carbon
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் போராட்டம்!