தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய இரண்டு மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உதயமாவதாக சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் அறிவித்தார். அத்துடன் விரைவில் 36ஆவது மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும், அதற்கான பரிசீலனை நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
25 ஆண்டுகால கோரிக்கைக்கு செவி மடுக்குமா அரசு? மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு! - farmer union
நாகை: மயிலாடுதுறையை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி அப்பகுதியில் பல்வேறு சங்கங்களின் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக தனி மாவட்டம் கேட்டு போராடிவரும் மயிலாடுதுறை கோட்டத்திற்கு இந்த புறக்கணிப்பு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறையில் வர்த்தக சங்கங்கள், சேவை சங்கங்கள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்காததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோயில் தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. சீர்காழி பகுதியில் மட்டும் நாளை கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.