தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் கொள்முதல் நிறுத்தம் - விவசாயிகள் வேதனை! - Farmers request

மயிலாடுதுறை:அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Farmers request
விவசாயிகள் கோரிக்கை

By

Published : Feb 24, 2021, 7:19 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெல் கொள்முதல் செய்ய 155 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்படட் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராம அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன.

நெல்மூட்டைகளை வைக்க இடமில்லாததால் நெல் கொள்முதல் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

எனவே உடனடியாக நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஆணையரகத்தில் குடியேறி சமைத்த மாற்றுத்திறனாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details