தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்கள், செவிலியருக்குக் கரோனா - மூடப்பட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - Nagapattinam District News

மயிலாடுதுறை : தரங்கம்பாடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர் உட்பட 5 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கரோனா
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கரோனா

By

Published : May 23, 2021, 4:09 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று (மே.23) திருக்கடையூர் அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், பணியாளர் ஆகிய 5 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.

சுகாதாரத் துறை அலுவலர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இருப்பதால், தற்காலிகமாக மருத்துவமனை மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள்நல்லூர், டி. மணல்மேடு, அபிஷேக கட்டளை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த சுகாதார நிலையம் மருத்துவ சேவை வழங்குகிறது. தற்போது சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவை!

ABOUT THE AUTHOR

...view details