மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தலுக்காக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உதவி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில்மன்னம்பந்தலில் உள்ள கல்லூரியில் நடைப்பெற்றது.
தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
மயிலாடுதுறை: வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
election
ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகள், பொதுமக்கள் வாக்களிக்க வரும்போது அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காணொலி காட்சி மூலம்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர்.