சென்னை கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்த பல ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய பல சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்ல தொடங்கினர்.
நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் கண்டறிந்து தனிமைப்படுத்திவருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட 175 பேர் அந்தவகையில் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளுக்கு வெளிமாநில, மாவட்டங்களிலிருந்து வந்த 167 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரத்தமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட 175 பேர் உளுத்துக்குப்பையில் கரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பிலிருந்த 8 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வந்த 167 பேர் கரோனா வார்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக அதிகரித்துள்ளது.