தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? - சீர்காழி பள்ளியில் ஒத்திகை!

சீர்காழி அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மழையின் முக்கியத்துவத்தையும், மழை காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாப்பது?: பள்ளியில் விழிப்புணர்வு
மழைக்காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாப்பது?: பள்ளியில் விழிப்புணர்வு

By

Published : Nov 30, 2022, 11:08 PM IST

மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு மழையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக செயற்கை மழை பொழிய வைத்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மழைக் காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், இடி, மின்னல் நேரங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் விளக்கப்பட்டது.

மழைக்காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாப்பது: பள்ளியில் விழிப்புணர்வு

இதற்காக செயற்கையாக மழை பெய்வது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடையுடனும் பங்கேற்றனர். மாணவர்கள் மீது மழை பொழிவது போல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் அதனை மாணவர்கள் ரசித்து கொண்டாடினர்.

இதையும் படிங்க:நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த சிறுவன் பலி!

ABOUT THE AUTHOR

...view details