ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.3.86 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ! - அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகாவில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் அடிக்கல் நாட்டினார்.

பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ்  Poompuhar MLA S. Paunraj  Poompuhar MLA S. Paunraj particpate Two New Bulding boomi pooja  boomi pooja  அடிக்கல் நாட்டு விழா  பூமி பூஜை
Poompuhar MLA S. Paunraj
author img

By

Published : Dec 11, 2020, 1:56 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் 110 விதியின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, அவர் கழியப்பநல்லூர் ஊராட்சியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் நிதி சார்பில் மூன்று கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவிற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

அடிக்கல் நாட்டும் எம்எல்ஏ

இந்தக் கட்டடத்தில் தீயணைப்பு நிலையம், வீரர்கள் தங்குவதற்கு 13 குடியிருப்புகள், பயிற்சி மைதானம் அமைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண் கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர், துணைத் தலைவர், வங்கி இயக்குநர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய ஓ.பி.எஸ்!

ABOUT THE AUTHOR

...view details