தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2020, 3:23 PM IST

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கல்

நாகப்பட்டினம்: செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு  அத்தியாவசியப் பொருள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கல்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

இதனையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கல்

இந்நிலையில் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முகக்கவசம், கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் குத்தாலம் துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, மாற்றுத்திறனாளிகளின் ஆதரவாளர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்றி பொருள்களை வாங்கிக்கொண்டனர்.

இதையும் படிங்க: கூலித்தொழிலாளிக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details