தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கிய எம்எல்ஏ! - school book distribution

நாகை: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை வழங்கும் நிகழ்வை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கிய எம்எல்ஏ!
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கிய எம்எல்ஏ!

By

Published : Aug 3, 2020, 8:28 PM IST

பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் விலையில்லா புத்தகப்பை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கிவருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 128 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கிய எம்எல்ஏ!

இதன் தொடக்கமாக, செம்பனார்கோவில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதனுடன் அப்பள்ளி மாணவ, மாணவிகள் 115 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கி, மாணவரிடையே சிறப்புரையாற்றினார். இதில், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம்!

ABOUT THE AUTHOR

...view details