தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூம்புகார் அரசு கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை ரத்து! - poompuhar

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பூம்புகார் அரசு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ஒட்டி வழங்கப்பட்ட 3 நாட்கள் விடுமுறையை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பூம்புகார் அரசு கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை ரத்து!
பூம்புகார் அரசு கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை ரத்து!

By

Published : Feb 15, 2023, 3:29 PM IST

மயிலாடுதுறை:சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பூம்புகார் அரசு கல்லூரியில், சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும், வகுப்பறை இருக்கைகள் மற்றும் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி முதல்வர் அறிவொளியை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அதேநேரம் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை புதுப்பிக்காததால், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் பெற்ற பட்டம் செல்லாது என்ற சூழல் நிலவி வருகிறது. அதேபோல் இந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே பணி மேம்பாடு வழங்காததால் கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் நேற்று (பிப்.14) கருப்பு பேட்ச் அணிந்தபடி பேராசிரியர்கள் பணிக்கு வந்தனர். இவ்வாறு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் போராட்டத்தை அடுத்து, பூம்புகார் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கல்லூரியில் நிலவி வரும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, இன்று (பிப்.15) முதல் நாளை மறுதினம் (பிப்.17) வரை 3 நாட்களுக்கு வகுப்புகளை ரத்து செய்து கல்லூரி முதல்வர் அறிவொளி உத்தரவிட்டார். இந்த நிலையில், கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் நாளை (பிப்.16) முதல் கல்லூரி வழக்கம்போல் இயங்கும் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவ சக்திவேல் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பூம்புகார் அரசு கல்லூரி மூன்று நாட்களுக்கு விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details