தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ! - Poombukar MLA

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 645 மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வழங்கினார்.

தரங்கம்பாடி
தரங்கம்பாடி

By

Published : Feb 2, 2021, 10:02 AM IST

தமிழ்நாட்டில் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 11ஆம் வகுப்புப் பயிலும் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறார்.

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குள்பட்ட செம்பனார்கோவிலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்பந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 645 மாணவ‌, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிபிஐ அலுவலர்கள் திடீர் விசிட்!

ABOUT THE AUTHOR

...view details