நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வசந்த பூஜை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை! - மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை
நாகை: மீன் வளம் பெருக வேண்டியும் சுனாமி, புயல் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து மீனவர்களை காக்கவும் வங்கக்கடலில் சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி அக்கரைப்பேட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பூரணகும்ப மரியாதையுடன் உற்சவ அம்மன் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடைகளுடன் கடற்கரைக்குச் சென்று அங்கு கடலில் மீன் வளம் பெருகவும் சுனாமி, புயல் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து மீனவர்களை காக்கவும் சமுத்திர ராஜனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் பூஜை செய்த பால், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அனைவரும் கடலுக்கு படைத்து வணங்கினர். தொடர்ந்து, ஆலயத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
TAGGED:
nagapattinam