நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர், செம்பதனிருப்பு, ஆலங்காடு, சாவடி உள்ளிட்ட இடங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 10 மாத கால பயிரான இந்த கரும்பு ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றது.
ஏக்கர் ஒன்றுக்கு கரும்பு நடவு செய்வது, தோகை உரிப்பது, உரமிடுவது, பராமரிப்பது என்று ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் செலவாகிறது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த மழை காரணமாக, கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றை மீண்டும் உரங்களிட்டு கூடுதல் செலவுடன் பயிர்கள் பாதுகாக்கப்பட்டன.