மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மகளிர் அணி சார்பில் 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் பவானி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில செயலாளர் தங்க.வரதராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி - வ்
மயிலாடுதுறை: குத்தாலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக கலை மற்றும் கலாசாரப் பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம், செயலாளர் பரணிதரன் ஆகியோர் பங்கேற்று, பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினர். முன்னதாக பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குத்தாலத்தில் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:'பாஜகவும் பொங்கல் விழாவும்' தொடரும் சொதப்பல்களால் சோகத்தில் நிர்வாகிகள்!