நாகப்பட்டினம்:பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் களைக்கட்டும். அந்த வகையில், நாகை தனியார் கல்லூரியில் கட்டக்கால் ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். அதன்படி, கல்வி நிறுவனங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றது. அந்த வகையில், நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று (ஜன.10) வெகு விமரிசையாக நடைபெற்றது.
பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு சூரியபகவானுக்குப் படையலிட்டுப் பூஜைசெய்த கல்லூரி மாணவ, மாணவிகள் கரும்புகள் கொண்டு அலங்கரித்து, தோரணங்கள் கட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.