நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாட்டுப்பொங்கல் பொதுமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர, கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் மஞ்சள், கும்குமம் வைத்தும் திருஷ்டி கயிறு கட்டியும் மாலைகளால் அலங்கரித்து வழிபட்டும் வருகின்றனர்.