மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார் இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், சீர்காழி, பூம்புகார் தொகுதி கடலோர மீனவர் கிராமங்களில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து துர்கா ஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்குச் சேகரிப்பு அப்போது, வாணகிரி, பூம்புகார் கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார் மரியாதை செய்து வரவேற்றனர். மேலும், மீனவ பெண்கள் ஆரத்தி எடுத்து திமுக வேட்பாளர்களை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு மீனவப் பெண்களுடன் கலந்துரையாடிய துர்கா ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தார். வானகிரியில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கவும், பூம்புகார் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த சட்ட மறுவரைவு செய்யவும் கோரிக்கைவிடுத்தனர்.
மேலும், அவர்களின் கோரிக்கையை ஏற்ற அவர் அதனை மனுவாகக் கொடுக்கும்படியும் ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மார்ச்சில் இரட்டிப்பான வாகன விற்பனை: அசத்தும் மாருதி, டோயோட்டா!