பொள்ளாச்சி பாலியல் வழக்கு - கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம் - தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம்
நாகை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே குற்றாலத்தில் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்க நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமை தாங்கினார். இதில், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் தப்ப முயற்சி மேற்கொண்ட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் மணல் தட்டுப்பாடு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.