நாகப்பட்டினம்:வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் காற்று நிரப்பக் கூடிய ரப்பர் படகு கரை ஒதிங்கி நின்றுள்ளது. இதை, அப்பகுதி மக்கள் நேற்று (ஜூலை 25) பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். இந்த படகு சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் கியூ-பிரிவு காவல் துறையினர் ஆகியோர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தோப்புத்துறை பகுதியில் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வெளிநாட்டவர் ஒருவர் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அவரை சந்தேகத்தின் பேரின் வேதாரண்யம் காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் போலந்து நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் வாடடிஸ்டா என்பதும் தெரியவந்தது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.