நாகை மாவட்டம் சீர்காழியில் அரசின் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் வழக்கம் போல் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி சோதனை செய்து மருத்துவம், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
தோப்புக்கரணம் போடவைத்த காவல்துறையினர் இதனைத்தொடர்ந்து சாலையில் தேவையில்லாமல் அலட்சியமாக வந்த 100க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கரோனா நோய் பாதிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினர்.
மேலும் அனைவரையும் 10 முறை தோப்புக்கரணம் போடவைத்து இனி தேவையில்லாமல் சாலையில் சுற்றி திரியக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவிற்கு கிடைத்த முத்தம் - வாயடைத்து போன காவலர்!