தமிழ்நாடு

tamil nadu

"பேஷன் ஷோ" போட்டியில், ராம்ப் வாக் சென்ற காவலர்கள் பணியிடமாற்றம்!

By

Published : Aug 4, 2022, 5:01 PM IST

செம்பனார்கோயிலில் அண்மையில் நடைபெற்ற "பேஷன் ஷோ" அழகுப்போட்டியில், ராம்ப் வாக் சென்ற 1 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

"பேஷன் ஷோ" அழகு போட்டியில், ராம்ப் வாக் சென்ற காவலர்கள் பணியிடமாற்றம்
"பேஷன் ஷோ" அழகு போட்டியில், ராம்ப் வாக் சென்ற காவலர்கள் பணியிடமாற்றம்

மயிலாடுதுறை:செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தனியார் மாடலிங் நிறுவனத்தின் சார்பில் "பேஷன் ஷோ" அழகுப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்று ''ராம்ப் வாக்" எனப்படும் ஒய்யார நடை நடந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

"பேஷன் ஷோ" போட்டியில், ராம்ப் வாக் சென்ற காவலர்கள் பணியிடமாற்றம்

போட்டியின் முடிவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை "ராம்ப் வாக்' நடந்து செல்ல போட்டியின் ஒருங்கிணைப்பாளர் வற்புறுத்தியதால் பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "தெறி" படத்தின் பின்னணி இசைக்கு ஏற்ப கம்பீரமாக "ராம்ப் வாக்" நடந்தனர்.

இது ஊடகங்களில் ஒளிபரப்பாகி சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து காவலர்களை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்வதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோதிலும் காவல்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாகப்பட்டினத்தில் இருந்தே இன்னமும் வெளியிடப்பட்டு வருவதால், இந்த உத்தரவை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை இளம்பெண் கடத்தல் விவகாரம் - மேலும் நான்கு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details