ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
நாகை: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி
அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க, சக காவலர்கள் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.