தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பாளர்களுக்கு மருந்தான காவலரின் விசில் இசை! - காவல் ஆய்வாளர்

மயிலாடுதுறை: திருவள்ளுவர் நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களை உற்சாகப்படுத்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் புதுமையான முறையை கையாண்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கைகொடுத்த காவல் ஆய்வாளர்
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கைகொடுத்த காவல் ஆய்வாளர்

By

Published : May 3, 2020, 12:43 PM IST

Updated : May 3, 2020, 1:51 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கடந்த மாதம் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினரால், தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களது தனிமை உணர்வை போக்க, மயிலாடுதுறை காவல்துறையினர் புதுமையான முறையை கையாள்கின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாரதிதாசன், ஒலிப்பெருக்கி மூலம் விசில் இசையால் சினிமா பாடல்களை இசைக்கிறார். இவரின், 'விசில் பாடல்கள்' அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கைகொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

அதுமட்டுமின்றி கரோனா வைரஸின் விபரீதம் புரியாமல் வெளியில் சுற்றும் இளைஞர்களை எண்ணி "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" என்ற பாடலை மிகவும் வருத்தத்துடன் பாடியுள்ளார்.

இவரின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் கரோனா சிறப்பு யாகம்!

Last Updated : May 3, 2020, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details