தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மீறி  நடைபெறவிருந்த கும்பாபிஷேகம் : தடுத்து நிறுத்திய காவல் துறை - நாகையில் கோயில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்திய காவல்துறை

நாகை : ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெறவிருந்த கோயில் கும்பாபிஷேகத்தை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அருள்மிகு முனீஸ்வரன் கோயில்
அருள்மிகு முனீஸ்வரன் கோயில்

By

Published : Jun 12, 2020, 5:09 PM IST

நாகையை அடுத்த பால்பண்ணைசேரியில் அமைந்துள்ளது அருள்மிகு முனீஸ்வரன் கோயில். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் நம்பிக்கைக்குரிய ஸ்தலமாக விளங்கி வந்த இந்த கோயிலின் திருப்பணிகள், கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்தன.

இக்கோயிலில் முருகன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களோடு, 10 அடி உயரமுள்ள முனீஸ்வரன் சிலையும் கட்டப்பட்டு வந்தது. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்றைய தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டைவைகள் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து, இன்று ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது.

கோயிலை இழுத்து மூடிய காவல்துறை

இந்நிலையில், தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறை ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து பக்தர்களை அப்புறப்படுத்திய காவல் துறையினர், யாகசாலை பூஜைகளை நிறுத்தியதுடன், விழாக் குழுவினரையும் வெளியேற்றி கோயிலை இழுத்து மூடினர்.

தொடர்ந்து கோயில் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் கேமரா பொருந்திய வாகனம் கொண்டு ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கோயில் முன்பு சடலமாகக் கிடந்த ஆண்: போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details