மயிலாடுதுறை:செம்பனார்கோயிலில் தனியார் அமைப்பு சார்பில் அழகுப்போட்டி நடைபெற்றது. பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுபோட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள், இளைஞர்கள், திருமணமான பெண்கள் உள்ளிட்ட நான்கு வகையாக அழகுப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் ஏராளமான சிறுவர், சிறுமியர், இளைஞர், திருமணமான பெண்கள் வண்ண உடைகளை அணிந்தபடி Ramp Walk எனப்படும் 'ஒய்யார நடை' நடந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அப்போது போட்டியாளர்கள் கேட்டுக்கொண்டமையால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "தெறி" படத்தின் பின்னணி இசைக்கு ஏற்ப காவல் உடையில் கம்பீரமாக நடந்து சென்றது பார்வையாளர்களின் பாராட்டுதலைப் பெற்றது.