தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன அழுத்தத்தைப் போக்க நடைப்பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினர்! - காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி தொடர்பான செய்திகள்

மயிலாடுதுறை: கவாத்து பயிற்சியின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை காவல் துறை அதிகாரிகளும், காவலர்களும் இன்று (நவ.,7)  நடைப்பயிற்சி  மேற்கொண்டனர்.

police walking
நடைப்பயிற்சி

By

Published : Nov 7, 2020, 10:46 AM IST

பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்குள்ளாகும் காவல் துறையினரின் உடல் நலனை பேணும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை கவாத்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் காவல் துறை அலுவலர்களும், காவலர்களும் இன்று (நவ.,7) நடைப்பயிற்சி மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதுமுள்ள காவல் அலுவலர்கள், காவலா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி, நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக சுமார் 3 கி.மீ நீண்டு தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

இதையும் படிங்க:ஓசூரில் காவலர்களுக்கான கவாத்து நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details