மயிலாடுதுறை: கரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.
ஊரடங்கு : வெளியே நடமாடாத மக்கள்... குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைவிட கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் உறுதி செய்யப்படுவதால், அந்தந்த மாநகராட்சிகள் கூடுதல் முக்கியத்துவத்துடன் கட்டுப்பாடுகளை கண்காணித்து வருகிறது.
ஊரடங்கு : வெளியே நடமாடாத மக்கள்... இதனிடையே நேற்று (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரடங்கு : வெளியே நடமாடாத மக்கள்... மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் 350க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் 6 நிரந்தர சோதனை சாவடிகள், 30 தற்காலிக சோதனை சாவடிகள், அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வானங்களில் வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்தும் இ-செலான் முறையில் ரூ. 500 அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை நகரில் பேருந்து நிலையம், கால்டாக்ஸ், கூறைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்