மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில், மயிலாடுதுறை பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் என 145 பேர் காவல்துறை அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகளான காந்திஜி சாலை, பட்டமங்களத்தெரு, மணிக்கூண்டு வழியே சென்று மீண்டும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது.