தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக்கொலை - ஜேசிபி ஆப்ரேட்டர் கொலை வழக்கு

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டரை ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டி கொலை
ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டி கொலை

By

Published : Nov 5, 2021, 6:37 AM IST

மயிலாடுதுறை: மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று (நவ.04) மாலை நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சதீஷை கத்தியால் குத்த வந்தனர். இதனைக் கண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தபோதிலும் சதீஷை மடக்கிய கும்பல் அவரது நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை காவல் துறையினர், சதீஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷின் அண்ணன் வினோத் என்பவர் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து, கடந்த சில மாதங்களாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துவந்ததும் தெரியவந்தது.

இந்த முன்விரோதம் காரணமாக இன்று சதீஷிடம் வலியச் சென்று தகராறில் ஈடுபட்டு விரட்டிச் சென்று கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் துறையினர், பழனிவேல் அவரது மச்சான் மாதவன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தவறுதலாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details