தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடி வெட்டிக்கொலை: குற்றவாளிகளுக்கு வலை - கொலை வழக்கு

மயிலாடுதுறை: மேலபட்டமங்கலம் அருகே பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பிரபல ரவுடி வெட்டிக்கொலை
பிரபல ரவுடி வெட்டிக்கொலை

By

Published : Feb 12, 2021, 10:29 AM IST

Updated : Feb 12, 2021, 1:40 PM IST

மயிலாடுதுறை மேலபட்டமங்கலம் திடல்தெரு ஈபி காலனியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் அருள் (34). இவரது பெயர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது.

மேலும், இவர் மீது கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர் இன்று (பிப்.12) அதிகாலை 4 மணியளவில் மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அருளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அருளை கொலைசெய்த கும்பலை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: சீர்காழி இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிகளை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு!

Last Updated : Feb 12, 2021, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details