தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரை தவறாக சித்தரித்து குழந்தையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு - தந்தைக்கு வலைவீச்சு!

நாகை : பிரதமர் நரேந்திர மோடியை தவறாக சித்தரித்து, தனது ஒன்றரை வயது குழந்தையின் பேஸ்புக் கணக்கில் பதிவிட்டது தொடர்பான புகாரில், தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

By

Published : Aug 14, 2020, 5:17 PM IST

degrading fb post about modi
degrading fb post about modi

பிரதமர் நரேந்திர மோடியை தவறான முறையில் சித்தரித்து, கடந்த ஏழாம் தேதி கெல்வின் லூயிஸ் என்பவரது ஃபேஸ்புக் கணக்கில் கார்ட்டூன்கள் பதிவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோடியை ஆபாசமான முறையில் சித்தரிக்கும் இந்தக் கார்டூன்கள் குறித்து பாஜகவின் மயிலாடுதுறை நகரத் தலைவர் மோடி.கண்ணன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரை விசாரித்த காவலர்கள் 'கெவின் லூயிஸ்' என்ற பெயரில் பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 153, 504, 505 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67இன் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த கெவின் லூயிஸ் என்ற ஒன்றரை வயது குழந்தையின் பெயரில் பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு பதிவுகள் வெளியிடப்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த பேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய குழந்தையின் தந்தை கவியரசனை காவல் துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கியில் ரூ. 25 கோடி பணமோசடி?

ABOUT THE AUTHOR

...view details