நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள பிடிக்கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின்பேரில் பிடிக்கட்டளை நிறைவேற்ற வேண்டித் தலைமறைவு குற்றவாளிகளுக்கு ஆட்கொணர்வு மனு கொடுக்கப்பட்டும், தனிப்படைகள் அமைத்தும், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
போலீசுக்கு டிமிக்கி கொடுத்து குற்றவாளி... 22 ஆண்டுகள் கழித்து கைது!
நாகப்பட்டினம்: குற்ற வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி
இந்நிலையில், மாவட்டத்தின் சங்கரன்பந்தலை சேர்ந்த தாமரைச்செல்வன், குற்ற வழக்கில் 22 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இன்று சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற அவரை குடியுரிமை அலுவலர்கள் உதவியுடன் நாகப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் அன்புராஜன் தலைமையிலான தனிப்படை அவரை கைது செய்து பிடிக்கட்டளையை நிறைவேற்றிச் சிறையிலடைத்தனர்.