நாகை மாவட்டத்திற்குள், புதுச்சேரி மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துவதை தடுக்க, காவல் துறையில் தனிப்பிரிவு செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில், மயிலாடுதுறை நகருக்குள், காரைக்காலில் இருந்து வாகனங்களில் மது கடத்தப்படுவதாக தனிப்பிரிவைச் சேர்ந்த காவலர்கள் இரண்டு பேருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளச்சாராயக் கும்பலை துரத்திச்சென்ற காவலர் மீது கொலைவெறித் தாக்குதல்!
நாகை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய கடத்தல் கும்பலை விரட்டிச்சென்ற காவலர் மீது பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரண்டு வாகனங்களை மடக்கிச் சோதனை செய்ததில், அதில் 600 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தில் வந்த பாபு என்ற நபரை கைது செய்தநிலையில், ஒரு நபர் தப்பியோடியுள்ளார். இது குறித்து மற்ற காவல் துறையினருக்கு இவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனிடையில் தப்பியோடிய நபர் மேலும் ரவுடிகள் 4 பேரை அழைத்துக்கொண்டு வந்து, கடத்தல் வாகனத்தை பலவந்தமாக ஓட்டிச்சென்றுவிட்டார்.
இதில் சுபாஷ் என்ற காவலர் அவர்களை பின்தொடர்ந்து ஓட்டிச்சென்றபோது, கள்ளச்சாராய கடத்தல் கும்பல், காவலரை சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை, கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கியதுடன், அவருடைய செல்போன், காவலர் அடையாள அட்டை ஆகியவற்றைப் பறித்துச்சென்றது. தலையில் பலத்த காயமுற்ற அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைவிரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராய கும்பலின் இந்தத் துணிகர தாக்குதல் மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.