நாகை மாவட்டம், கொள்ளிடம் அடுத்த ஆயங்கரன்சத்திரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் சாராய வியாபாரி ஒருவருடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில் காவலர், கொள்ளிடம் காவல்நிலையத்தில் 15 காவலர்கள் பணிபுரிந்ததாகவும், தற்போது 25 பேர் உள்ளதால் சாராய வியாபாரி கொடுக்கும் மாமூல் போதவில்லை எனக் கூறுகிறார்.
சாராய வியாபாரியிடம் 'மாமூல் பேரம்' பேசும் காவலர்! ஆடியோ வெளியீடு - வைரலான ஆடியோ
நாகை: மாமூல் சரியாக கொடுக்கவில்லை என்றால் சாராய விற்பனையில் ஈடுபடக் கூடாது என காவலர் ஒருவர் செல்போனில் மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அதுமட்டுமல்லாமல் காவல் ஆய்வாளருக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாயும், காவலர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என மாமூல் கேட்கும் அந்தக் காவலர், அதைவிட குறைவாக கொடுத்தால் வியாபாரம் நடத்த வேண்டாம் என கட்டளையிடுகிறார். நேற்றுகூட தான் அவனை பார்த்ததாகவும், அவன் தன்னைப் பார்த்து கண்டுகொள்ளாமல் போகிறதாகவும் எனத் தெரிவித்த அவர், என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் என ஆவேசமடைந்தார்.
அதற்கு மறுமுனையில் உள்ளவர், நாளை நான் அவனை நேரில் வந்து உங்களை சந்திக்க சொல்கிறேன் ஐயா' என தெரிவித்து செல்போனை துண்டிக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. காவலரே தாமாக முன்வந்து சாராயம் விற்பனை செய்ய மாமூல் கேட்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.