நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர்.
அப்போது, 300 ரூபாய் கொடுத்து நாகராஜன் டீசல் போட்டபோது, டீசல் போடும் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜபாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைக்கலப்பில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கும் திமுகவினர் தகவலறிந்து பெட்ரோல் பங்கிற்கு வந்த நாகராஜின் ஆதரவாளர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை சமமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
ராஜபாண்டியனை டீசல் போடும்போது, நாகராஜன் தாக்கிய வீடியோ காட்சிகளும், அலுவலகத்தில் புகுந்து அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகி-பெட்ரோல் பங்க் ஊழியர் இடையே ஏற்பட்ட கைகலப்பு இது ஒருபுறம் இருக்க ஊழியரை தாக்கிய நாகராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் புகாரை பெற்ற கீழ்வேளூர் காவல் துறையினர் அடி வாங்கிய அப்பாவி ஊழியரையே கைது செய்த சம்பவம் அப்பகுதிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ரஜினிக்கு நிகர் அஜித் மட்டுமே, விஜய் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி