மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் ரவீந்திரன்(27) விவசாய கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த சுப்புரமணியன் மகள் பிரியா(25) என்பவருக்கும் 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவதாகவும், இதனால் பிரியா தனது கணவனை தாக்கி காயப்படுத்தி விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கணவன் உயிரிழப்பு - மனைவியின் மீது சந்தேகம்? - காவல்துறை விசாரணை
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் மனைவி தாக்கி கணவன் உயிரிழந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறியதால் மனைவியிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்துள்ளனர். பிறகு வீட்டில் உள்ள ரவீந்திரன் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக பிரியா தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரவீந்திரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர் ரவீந்திரன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், பிரியாதான் ரவீந்திரனை தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறியதால், பிரியாவை காவல்நிலையம் அழைத்துச் சென்று மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.