தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கடத்தி சென்ற உறவினர் மீது பாய்ந்தது போக்சோ! - தமிழ் குற்றச் செய்திகள்

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி 9ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Pokcho jumped on the relative who kidnapped the girl!
Pokcho jumped on the relative who kidnapped the girl!

By

Published : Oct 5, 2020, 2:06 AM IST

மயிலாடுதுறை நகரில் 9-ஆம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவரை கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று உறவினர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப் பதிவுசெய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடிவந்தார்.

இந்நிலையில் சிறுமியை கடத்தியதாக மயிலாடுதுறை செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சங்கர்(21) என்ற இளைஞரை கைதுசெய்த காவல்துறையினர், அவரிடமிருந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சங்கரிடம் விசாரித்ததில், சிறுமியின் உறவினர் என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்ததாகவும், சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியிடன் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தைக்கூறி, கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் வழக்கை மாற்றி போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லாட்ஜில் தங்கி கஞ்சா, போதை மாத்திரைகளைப் பயன்படுத்திவந்த 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details