நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவீரன் வன்னியர் சங்கம் நிறுவனத் தலைவர் வி.ஜி.கே. மணி சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வன்னிய சமூக மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய தலைவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.
வன்னியர்களுக்குச் சொந்தமான வன்னிய அறக்கட்டளை, டாக்டர் ராமதாஸ் குடும்ப சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே, வன்னியர் அறக்கட்டளை சொத்துகள் சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுப்போம். டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி நடிகர் கமல், ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்க திட்டம் தீட்டுகிறார். ஆனால், யாருடனும் கூட்டணியின்றி ராமதாஸ் நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ராமதாஸை கடுமையாக விமர்சிக்கும் வி.ஜி.கே. மணி மேலும், வன்னியர் அறக்கட்டளை சொத்துகள் அனைத்தையும் சட்டப்படி மீட்டு வன்னிய மக்களுக்கு கொடுப்போம் என்றார்.
இதையும் படிங்க: மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் - திமுக எம்.பி.